Thamizh Padam – Tamil Movie Review
by Bheeshmar on 01/02/10 at 12:50 pm --
|
தமிழ் படம்… சென்னை 28, சரோஜா, டீமில் இருந்து வந்த சிவா, தனியாக சோலோ ஹீரோவாக அறிமுகம் ஆகி இருக்கும் படம், படத்தின் ட்ரைலர் பார்த்த நாளிலிருந்தே, ரிலீசுக்காக வெயிட் பண்ணி பாத்த படம்… படம் பாத்து முடிச்சுட்டு வெளியே வரும் போது நாம என்ன படம் பாத்துட்டு வருகிறோம் என்பதே தெரியாத அளவிற்கு எல்லா தமிழ் திரைப்படங்களையும் வெட்டி ஓட்டி வைத்திருக்கும் படம் தான் இந்த தமிழ் படம்… படத்திற்கு டைட்டில் போடும் ஸ்டைல் கூட நம்முடைய பழைய படங்கள் பாணியில், Negative Movements உள்ள ஒரு Background, ராஜ காலத்து ஸ்டைல் என்று எடுத்தும் “அடடே இது, அதுல்ல!!” என்று ஆரம்பிக்கும் நம்முடைய ஒப்பிடும் படலம் படம் முழுக்க பேச வைத்திருக்கிறது… ஒரு குடிசை வீட்டில் பிறக்கும் ஆண் குழந்தையை கல்லிப்பாளுட்டி (“PRS கள்ளிப்பால்! சுத்தமானது, சுகாதாரமானது”) கொள்ள சொல்லும் தந்தையிடம் இருந்து, தானகவே பாட்டியிடம் பேசி சென்னைக்கு எஸ்கேப் ஆகும் அபூர்வ குழந்தை தான் சிவா!! சென்னையில் நடக்கும் ரௌடிகள் அட்டகாசத்தை பார்த்து ஆவேசபடும் 10 வயது சிவா நான் எப்போ பாட்டி வளருவேன் என்று கேட்டதும் “போயி எந்த சைக்கிள் பெடல சுத்து டா” என்று சொன்னதும், சைக்கிள் பெடல சுத்தி வளர்ந்தவனாய் ஆகி விடும் காட்சி “குபீர் சிரிப்பு”, பின்பு ரௌடிகளை அடிக்கிறார், Opening சாங்கில் விஜயை ஏகத்துக்கும் கேலி செய்கிறார், சிவாவுக்கு ஆட வராது இந்த படத்தில் Prove ஆகிடுச்சு.. சிவா உண்மையாவே நல்லா நடிக்கிறார், அவருடைய டயலாக்டெலிவரி I have Really Impressed…. படத்தில் கதை என்று ஏதும் இருக்குற மாதிரி எனக்கு தெரியல, போக்கிரி படத்தோட கதைய Choose செய்திருக்குறாங்க, அதுல எவ்ளோ படத்த மிக்ஸ் பண்ண முடியுமோ அவ்ளோ படத்த மிக்ஸ் பண்ணி இருக்கார் அமுதன்.. படத்தோட முதல் பாதில கலக்கலா எல்லா படத்தையும் நமக்கு நியாபகம் வர வழைக்கும் காட்சி அமைப்பு பாராட்டுக்குரியது, அதிலயும் குறிப்பிட்டு சொல்லனும்னா, தளபதி, பாட்ஷா, பில்லா,மௌன ராகம், மொழி, என்று எல்லா Land Mark சீனையும் ஏகத்துக்கும் மொக்கையாய் காண்பித்து இருக்கிறார்கள்.. படம் போக போக இதே மாதிரி காட்சிகள் நம்மை கொஞ்சம் போர் அடிக்க வைக்கிறது, அதெல்லாம் இருக்கட்டும் காமெடி எங்கே? என்று கேட்குமளவிற்கு அங்கொன்றும் இங்கொன்றுமாய் காமெடி இருப்பது கொஞ்சம் மைனஸ் தான்… இரண்டாம் பாதியில் அது இன்னும் கொஞ்சம் அதிகம் ஆகிறது.. தான் காதலிக்கும் பெண்ணை கல்யாணம் பண்ண தன் அப்பா யார் என்று தேடி ஊருக்கு போகும் முதல் கிளைமாக்ஸ் வரை எல்லாம் கொஞ்சம் இழுவை… சிரிப்பே வரல்ல!! Imitating அப்டின்னு முடிவு பண்ணிட்டா அத கரெக்டா பண்ணனும், ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்னு தள்ளாடி தள்ளாடி படத்த சூட் பண்ண மாதிரி தோணுது… எடுத்துகாட்டா முதல் காட்சில வரும் மம்முட்டி கேரக்டர் பன்னவரே அடுத்த சீன்ல ரகுவரன் மாதிரி இமிடேட் பண்றது மொக்கையா இருக்குது!! கண்ணனின் பின்னணி இசை படத்தை ரசிப்பதற்கு பதிலாக வெறுக்க வைக்கிறது, Opening Song சுமார், வார்த்தைகளே இல்லாத பாட்டு புதுமை!! நிரவ் ஷா ஒளிப்பதிவு நச்! இவர் தூம், பில்லா, சர்வம் படத்துக்கு ஒளிப்பதிவு அமைத்தவர் என்பது குறிப்பிட தக்கது!! நம்முடைய தளத்தில் ஏற்கனவே Most Expecting Movie என்று இந்த படத்தை பற்றி ஒரு article எழுதும் அளவிற்கு இந்த படத்தை எதிர்பார்த்தோம், ஆனால் அந்த எதிர் பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும்!! கதையே இல்லாத, பெர்பெக்ட் ஸ்கிரிப்ட் இல்லாத படத்துக்கு கூட Producer கெடைபாங்கன்னு இந்த படத்த பாத்து தான் தெரிஞ்சிக்கணும், உண்மையா சொல்லனும்னா நான் கதைய எதிர் பாத்து போகல, ஆனாலும் மூணு மணி நேரம் ஒரே எடத்துல உட்கார கொஞ்சம் கதை தேவை என்பதை யாராலும் மறுக்க முடியாது!! விஜய் டிவியில் வரும் லொள்ளு சபா நிகழ்ச்சிய தொடர்ச்சியா பார்த்த அனுபவம்!! இந்த படத்துக்கு அந்த நிகழ்ச்சி ரொம்ப தேவலாம் என்று தான் சொல்ல தோன்றுகிறது… தமிழ் படம் – “விக்ஸ் மாத்திரை சாப்டுங்க தலைவலி போகுங்க!!” |
|
|




One Response to “Thamizh Padam – Tamil Movie Review”
Jayakumar
Feb 5th, 2010
all said and done – i understand the movie is full of ‘take’ on other movies and important scenes.. that will be fun !!
it is rare that a full fledged movie is a satire these days ,., that requires lots of guts !!
i want to see this movie – if not in theater, but on tv, which should be in next 6-8 months !!
[Reply to above comment]